Social Icons

Pages

Sunday 8 July 2012

Pin It

Widgets

முதல்வனின் வழிபாடு!

எண்ணம்  போல , எதனையும் அடைய வேண்டுமென அனைவரும் விரும்புகின்றனர்.


தாங்கள் செய்கின்ற , எந்தக் காரியமும் தங்கு தடையின்றி , இடையூறின்றி முடிய வேண்டும் என்பதற்காக , ஆலமரத்தடி விக்னேஸ்வரரிலிருந்து , அழகிய ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கண நாதனை அனைவரும் வழிபட்டே , தங்கள் காரியங்களைத் துவக்குகின்றனர் என்றால் அது மிகையல்ல.



புதியதாய் கட்டிய வீடாக இருந்தால் , கணபதி ஹோமம் செய்து, குடிபுகு கின்றனர்.


தங்களால் இயன்ற , தெரிந்த அளவிற்கு மிகவும் எளிமையாய் பூசித்து வணங்கும் கடவுளும் வினாயகர் தான்.


கொஞ்சம் மஞ்சளைக் குழைத்து, கையில் குமிழாகப் பிடித்து, வைத்து அருகம்புல் சாத்தினாலே அது பிள்ளையாராகி விடும். 


வினாயகருக்கு வெள்ளெருக்கு, செம்பருத்தி, ஆகிய மலர்களுடன் அருகம்புல்லும் உகந்தது. 


இனிப்பு கொழுக்கட்டை ( மோதகம்) , அவல் , பொரி , வறுகடலை , தேங்காய் , வாழைப் பழம் , மாம்பழம் , இவைகள் பிடித்தமானவை.


தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்தோ கணேச ப்ரசோதயாத்!


இது கணேசருக்கான காயத்ரி மந்திரம்.


“ முந்தி செய்த வினை , அந்தமுக் தீர
தொந்தி பெருத்தானின் துணையை நாடினேன்
பந்தம் தவிர்த்து பாவி எனைக் காத்திட
பாதார விந்தமதைப் பற்றினேன்
வேழ முகத்தோனே! வினாயகப் பெருமானே!
விக்ன வினாயகா போற்றி!
வேத மூலமே போற்றி ! போற்றி!
சங்கட ஹரனே போற்றி போற்றி!
சதுர்முக நாயகா போற்றி போற்றி
பஞ்ச கரனே போற்றி போற்றி!
துஞ்சிடும் துயர்தீர்ப் பவனே போற்றி!
தும்பிக்கை யானே போற்றி! போற்றி!
தூயகரிமுகத் தோனே போற்றி!
ஆய கலைகளின் ஆரம்பமே போற்றி!
அருள்முகம் காட்டும் ஐயா போற்றி!
அற்புதம் நிகழ்த்தும் பொற்பதம் போற்றி!
நற்பரனே; தாரணனே , வாரணமே போற்றி ! போற்றி!


எண்ணற்ற பெயர்களில் வினாயகரை அழைத்து, வணங்கி மகிழ்கின்றனர்.
அவரின் சில் திருக்கோலங்களைப் பார்ப்போம்.



இனி, வினாயரின் அருமையான பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்!







2 comments:

  1. மிக அருமையான தகவல்களுடன் கணபதி வணக்கம்! தொடரட்டும் உங்கள் தொண்டு!

    ReplyDelete
  2. தளத்தில் இணைந்து , கருத்திட்ட தோழருக்கு வணக்கமும் நன்றியும் !

    ReplyDelete

 

ஆலயங்கள்

கிருஷ்ணதாசன் வலைப்பதிவில் வாழும்போதே அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயங்கள் இடம்பெற்றுள்ளன.

Followers

Total Pageviews

நம்பிக்கை வை!

தெய்வத்தால் ஆகாததெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்!